/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.1.51 கோடிக்கு வேளாண் பொருட்கள் விற்பனை
/
மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.1.51 கோடிக்கு வேளாண் பொருட்கள் விற்பனை
மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.1.51 கோடிக்கு வேளாண் பொருட்கள் விற்பனை
மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.1.51 கோடிக்கு வேளாண் பொருட்கள் விற்பனை
ADDED : நவ 28, 2024 12:57 AM
மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம்
ரூ.1.51 கோடிக்கு வேளாண் பொருட்கள் விற்பனை
தர்மபுரி, நவ. 28-
''மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், இரண்டு ஆண்டில், 1.51 கோடி ரூபாய் அளவிற்கு வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது,'' என, தர்மபுரி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விவசாயிகளின் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மஞ்சள், புளி, சோளம், கம்பு, திணை, ராகி, நெல் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த, 2023 ல், 438 விவசாயிகள், 97.27 லட்சம் ரூபாய் அளவில், வேளாண் பொருட்கள் விற்பனை
செய்தனர். அதேபோல், நடப்பாண்டில், அக்., மாதம் வரை, 174 விவசாயிகள், 34.15 லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனை
செய்துள்ளனர்.
மேலும், பண்ணை வர்த்தகம் மூலம், நேரடியாக விவசாயிகள் தோட்டத்திற்கு சென்று, விவசாயிகளிடம் பொருட்கள் வாங்கப்பட்டது. இதில், 2023 ல், 47 விவசாயிகளின் பொருட்கள், 15.98 லட்சம் ரூபாய்க்கும், நடப்பாண்டில், 27 விவசாயிகளின் பொருட்கள், 3.7 லட்சம் ரூபாய் அளவில், வேளாண் வர்த்தகம் நடந்துள்ளது. கூடுதலாக, காய்கறிகள் மற்றும் தேங்காய் உள்ளிட்டவை நேரடி பண்ணை வர்த்தகத்தில் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான, பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு
வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.