/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 05, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் முத்து, பொருளாளர் முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 251 பஞ்.,களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தில், ஆண்டிற்கு, 200 நாள் வேலை, தினக்கூலி, 600 ரூபாய் என வழங்க வேண்டும். மேலும், அனைத்து பேரூராட்சிகளுக்கும், 100 நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும். வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.