ADDED : ஆக 21, 2025 01:52 AM
தர்மபுரி,தர்மபுரி, அ.தி.மு.க., அலுவலகத்தில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் ஏற்பாட்டில் நேற்று நடந்தது. இதில், தர்மபுரி மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசினார்.
தர்மபுரி மாவட்டத்திற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அக்., மாதம் வருவதையொட்டி, மாவட்டத்திலுள்ள, 5 தொகுதிகளிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என, நிர்வாகிகளிடம் பேசினார்.
இதில், மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர் பழனி, மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி. உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.