/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இ.பி.எஸ்., தர்மபுரி வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
/
இ.பி.எஸ்., தர்மபுரி வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
இ.பி.எஸ்., தர்மபுரி வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
இ.பி.எஸ்., தர்மபுரி வருகை குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : செப் 10, 2025 01:36 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்திற்கு செப்., 17 அன்று வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், தர்மபுரி, கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.
இதில், தர்மபுரி மாவட்ட செயலாளர் அன்பழகன் பேசுகையில், ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், 5ம் கட்ட பிரசார சுற்றுப்பயணத்தில் செப்., 17 மற்றும் 18ல் தர்மபுரி மாவட்டத்திற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வருகை தர உள்ளார். அது சமயம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக வந்து, சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
இதில், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் சுமதி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பிரசாத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* கடத்துாருக்கு வரும், 17ல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வருகையையொட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பாப்பம்பாடி, மோளையானுார், ஆலாபுரம் பொம்மிடி, மெணசி உள்ளிட்ட ஊராட்சிகளிலும், பொ.மல்லாபுரம் பேரூராட்சியிலும் எம்.எல்.ஏ., - கோவிந்தசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.