/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளிப்பாளையத்தில் ஏர் ஹாரன்களால் தொல்லை
/
பள்ளிப்பாளையத்தில் ஏர் ஹாரன்களால் தொல்லை
ADDED : ஜூன் 24, 2025 01:38 AM
பள்ளிப்பாளையம், ஜூன் 24
பள்ளிப்பாளையம் பகுதியில் பல வாகனங்களில் ஏர்ஹாரன்களை பொருத்தி, அதிக ஒலி எழுப்பி செல்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் பதற்றமடைகின்றனர். பாலம் சாலை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நெரிசல் மிகுந்த சாலைகளில், இளைஞர்கள் டூவீலர்களில் செல்லும்போது, ஆந்தை அலறுவது போல் ஹாரன்களை அடித்து செல்கின்றனர். சில தனியார் பஸ், சரக்கு வாகனங்களிலும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் கூறுகையில், ''கடந்த வாரம் எஸ்.பி.பி., காலனி பகுதியில் ஆய்வு செய்து, ஏர்ஹாரன் பயன்படுத்தி ஏழு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறாம்,'' என்றார்.