/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் 98 ஆயிரம் கனஅடி நீரால் மூழ்கிய ஐவர்பாணி
/
ஒகேனக்கல்லில் 98 ஆயிரம் கனஅடி நீரால் மூழ்கிய ஐவர்பாணி
ஒகேனக்கல்லில் 98 ஆயிரம் கனஅடி நீரால் மூழ்கிய ஐவர்பாணி
ஒகேனக்கல்லில் 98 ஆயிரம் கனஅடி நீரால் மூழ்கிய ஐவர்பாணி
ADDED : ஜூலை 28, 2025 04:17 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், 98 ஆயிரம் கன அடிநீர் வரத்தால், ஐவர்பாணி பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
கர்நாடக, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பரு-வமழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்-குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதையடுத்து கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளிலிருந்து வினாடிக்கு, 98,000 கன அடி உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 32,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 9:00 மணிக்கு, 67,000 கன அடியாக அதிகரித்தது. மாலையில், 88,000 கன அடியாக அதிகரித்து இரவில், 98 ஆயிரம் கன அடி-யாக
எகிறியது.
இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஐவர்பாணி அருவியை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைபாதைக்கு பூட்டு போட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒகே-னக்கல் காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.