/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அனைத்து கட்சியினர் போராட்டம் ஒத்திவைப்பு
/
அனைத்து கட்சியினர் போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : நவ 27, 2024 01:23 AM
குளித்தலை, நவ. 27-
சமுதாயக்கூடம் கட்டும் பணி, ஒரு வாரத்துக்குள் துவங்கும் என, பேச்சுவார்த்தையில் கூறப்பட்டதால், அனைத்து கட்சியினரின் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
குளித்தலை அடுத்த, கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டும் பணி துவங்கியது. இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று, (26ல்) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அனைத்து கட்சிகளின் சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், நேற்று தே.மு.தி.க., -சி.பி.எம்., தி.மு.க.,- அ.தி.மு.க.,- காங்.,மற்றும் பொதுமக்கள் இடையே டி.எஸ்.பி.,செந்தில்குமார், குளித்தலை தாசில்தார் இந்துமதி ஆகியோர், ஆ.டி.ஓ., அலுவலகத்தில் மாவட்ட கலால் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், ஒரு வாரத்திற்குள் சமுதாயக்கூடம் கட்டும் பணி துவங்கும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைத்து கட்சியினரின் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. கரூர் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., மாவட்ட செயலர் சிவம்ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் ரங்கநாதன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் முத்து செல்வன், தி.மு.க., யூனியன் குழு உறுப்பினர் குண்டு சுப்பிரமணி, காங்., குளித்தலை வட்டார தலைவர் ஆறுமுகம். அ,தி.மு.க., பிரமுகர் சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.