ADDED : செப் 03, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிக-ரித்துள்ளது.
அங்குள்ள அணைகள் பாதுகாப்பு கருதி, தமிழகத்-திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலி-குண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினா-டிக்கு, 25,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 16,000 கன அடியாக சரிந்தது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று நீர்வரத்து குறைந்த நிலையில், காவிரி-யாற்றில் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.