/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 18, 2024 02:56 AM
மாற்றுக்கட்சியினர்
தி.மு.க.,வில் ஐக்கியம்
பென்னாகரம், அக். 18-
பென்னாகரம் மற்றும் ஏரியூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட, பா.ம.க., மற்றும் அ.தி.மு.க.,வினர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று
நடந்தது.
பென்னாகரம், தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட காட்டூர், கருங்காலி மேடு பகுதியை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட பா.ம.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் முன்னாள் எம்.எல்.ஏ., இன்பசேகரன் தலைமையில், தி.மு.க.,வில் இணைந்தனர். நிகழ்சியில், ஒன்றிய செயலாளர்கள் மடம் முருகேசன், செல்வராஜ், டவுன் பஞ்., தலைவர் வீரமணி உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து
கொண்டனர்.