ADDED : நவ 13, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சி, 2வது வார்டில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில், 16.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய-தாக அமைக்கப்பட்ட அங்கன்வாடிமைய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமை வகித்தார்.
பேரூராட்சி செயலர் ரவிசங்கர், நகர செயலாளர் தீபக் முன்னிலை வகித்தனர். பர்கூர், தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

