/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தக்காளியில் நோய் தாக்குதல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு
/
தக்காளியில் நோய் தாக்குதல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு
தக்காளியில் நோய் தாக்குதல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு
தக்காளியில் நோய் தாக்குதல் தோட்டக்கலை துறையினர் ஆய்வு
ADDED : நவ 13, 2025 03:09 AM
பாலக்கோடு: பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில், தக்காளி செடிகளில் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்ட பாதிப்பால் விவசா-யிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு தொடக்கம் முதலே தக்காளி செடியில் வைரஸ் நோய் தாக்குதலால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர்.
பாப்பாரப்பட்டி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்-திமா தலைமையில் காடுசெட்டிப்பட்டி பகுதி தக்காளி தோட்-டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சீதோஷ்ண நிலை மாற்-றத்தால் தக்காளி செடிகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகியதை பார்-வையிட்டு, அதை கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினர்,இந்த ஆய்வின்போது பேராசிரியர் வெண்ணிலா, உதவிபேராசிரி-யர்கள் தெய்வமணி, செந்தில்குமார், தோட்டக்கலை உதவி இயக்-குனர் ஆனந்த், தோட்டக்கலை
அலுவலர் செல்வன், உதவி தோட்டக்கலை அலுவலர்
சங்கர்கணேஷ் உடனிருந்தனர்.

