/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 01:48 AM
தர்மபுரி :தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார். செயலாளர் கவிதா, பொருளாளர் தெய்வானை, உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், பணி ஓய்வு பெறும்போது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக, 10 -லட்சம் ரூபாய் உதவியாளர்களுக்கு, 5- லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பணி ஓய்வுக்கு பிறகு குடும்ப ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் அகவிலை படியுடன் வழங்க வேண்டும். மே மாத கோடை விடுமுறையை ஒரு மாத காலமாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிபந்தனையின்றி உடனடியாக நிரப்ப வேண்டும்.
மொபைல் வழங்காத மாவட்டங்களுக்கு, 5-ஜி மொபைல் மற்றம் 5-ஜி சிம் கார்டு வைப்பை இணைப்பு வழங்கி, எப்.ஆர்.எஸ்., முறையை எளிமைப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

