/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தெருநாய்களுக்கு கருத்தடை நகராட்சியில் பணி தொடக்கம்
/
தெருநாய்களுக்கு கருத்தடை நகராட்சியில் பணி தொடக்கம்
தெருநாய்களுக்கு கருத்தடை நகராட்சியில் பணி தொடக்கம்
தெருநாய்களுக்கு கருத்தடை நகராட்சியில் பணி தொடக்கம்
ADDED : நவ 05, 2025 01:49 AM
தர்மபுரி :தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் தொல்லை குறித்து, தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சில அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் படி, மீண்டும் தெரு நாய்களை பிடித்து, அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன.
அந்த வகையில், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடந்தபோது, 350 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் நேற்று முதல் தெருநாய்களை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதை, நகராட்சி சேர்மன் லட்சுமி நகர் நல அலுவலர் மருத்துவர் லட்சியவர்ணா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து, நகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா கூறுகையில்,''தர்மபுரி நகராட்சியில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு முறையாக உணவு வழங்கப்பட்டு, பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர்களை கொண்டு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்படும். அறுவை சிகிச்சை பின், குணமடைந்த நாய்களை பிடித்த இடத்தில் மீண்டும் கொண்டு சென்று விடப்படும்,'' என்றார்.

