/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி பணியாளர்கள்தொடர் காத்திருப்பு போராட்ட ம்
/
அங்கன்வாடி பணியாளர்கள்தொடர் காத்திருப்பு போராட்ட ம்
அங்கன்வாடி பணியாளர்கள்தொடர் காத்திருப்பு போராட்ட ம்
அங்கன்வாடி பணியாளர்கள்தொடர் காத்திருப்பு போராட்ட ம்
ADDED : மே 04, 2025 01:18 AM
தர்மபுரி:கோடை விடுமுறை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராஜம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிதா, பொருளாளர் தெய்வாணை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லில்லி புஷ்பம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில், ஒரு மாத கால விடுமுறை, தர்மபுரி மாவட்டத்தில், 1,333 அங்கன்வாடி மையங்களில் உள்ள, 565 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமையல் செய்து சாப்பிட்டு தங்கினர். நேற்று, 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.