அண்ணாதுரை பிறந்தநாள் விழா விரைவு மிதிவண்டி போட்டிகள்
அண்ணாதுரை பிறந்தநாள் விழா விரைவு மிதிவண்டி போட்டிகள்
UPDATED : நவ 15, 2026 03:02 AM
ADDED : நவ 15, 2026 01:22 AM

தர்மபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தர்மபுரி மாவட்டம் சார்பாக, 2026ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அண்ணாதுரை பிறந்தநாள் விழா, விரைவு மிதிவண்டி போட்டிகள் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நடந்த போட்டியை தர்மபுரி ஆர்.டி.ஓ., ஜார்ஜ் தொடங்கி வைத்தார். போட்டியில், 334க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் செய்திருந்தார்.
மாணவர்களில், 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், வேதரக்சன் முதலிடம், கிரித்திக் ரோஷன், 2ம் இடம், தேஜஸ், 3ம் இடம், 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், திரேன்குமார் முதலிடம், பிரமுகன், 2ம் இடம், ஸ்ரீனிஸ், 3ம் இடம், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், யோகேஸ்வரன் முதலிடம், இஷான், 2ம் இடம், பிரதாப், 3ம் இடம் பெற்றனர்.
மேலும் மாணவியரில், 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஹர்பியா முதலிடம், தருணிகா, 2ம் இடம், தனுஸ்ரீ, 3ம் இடம், 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கேசிகா முதலிடம், வைஸ்ணவி, 2ம் இடம், தர்சினி, 3ம் இடமும், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இசையமுது முதலிடம், அர்ச்சனா, 2ம் இடம், நர்மதா மூன்றாமிடம் பெற்றனர்.
இதில், முதல் பரிசாக, 5,000 ரூபாய், 2ம் பரிசு, 3,000, 3ம் பரிசு, 2,000, 4 முதல், 10 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா, 250 ரூபாய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்
பட்டன.
