ADDED : நவ 16, 2026 03:41 AM
தர்மபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தர்மபுரி மாவட்டம் சார்பாக, அண்ணாதுரை மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் தர்மபுரி மாவட்ட தடகள சங்க தலைவர் சரவணன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில், 17 வயது முதல், 25 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கு, 8 கி.மீ., துாரமும், வீராங்கனைகளுக்கு, 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கு, 10 கி.மீ., வீராங்கனைகளுக்கு, 5 கி.மீ., துார போட்டிகளும் நடந்தன. இதில், 313 வீரர்களும், 130 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். மேலும், 17 வயது முதல், 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில், கிஷோர்குமார் முதலிடம், நிதிஷ்குமார் 2ம் இடம், மாரி கணேசன் 3ம் இடம், பெண்கள் பிரிவில் பூர்வஸ்ரீ முதலிடம், கவிநயா 2ம் இடம், காயத்ரி 3ம் இடமும் பெற்றனர். 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் சதீஸ் முதலிடம், முத்துகுமார், 2ம் இடம், அன்பரசு, 3ம் இடமும், பெண்கள் பிரிவில் அருண்யா முதலிடம், ராஜேஸ்வரி, 2ம் இடம், லீலா, 3ம் இடமும் பெற்றனர். நெடுந்தூர ஓட்டப்போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாய், 2ம் பரிசு, 3,000, 3ம் பரிசு, 2,000, 4ம் இடத்திலிருந்து, 10ம் இடம் வரை பெற்றவர்களுக்கு தலா, 1,000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் செய்திருந்தார்
