/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோட்டில் தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா
/
பாலக்கோட்டில் தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா
ADDED : செப் 16, 2025 02:13 AM
தர்மபுரி, தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின், 117வது பிறந்தநாள் விழா, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் முன், பேரூராட்சி சேர்மன் முரளி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி சேர்மன் முரளி அண்ணாதுரையின் உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக, 'ஓரணியில் தமிழ்நாடு' உறுதிமொழி ஏற்றனர்.
இதில், நகர அவைத்தலைவர் அமானுல்லா, ஒன்றிய துணை செயலாளர் ரவி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் மோகன், குமரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மன்சூர், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.