/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும் இடங்கள் அறிவிப்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும் இடங்கள் அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும் இடங்கள் அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும் இடங்கள் அறிவிப்பு
ADDED : ஆக 05, 2025 01:38 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓசூர் மாநகராட்சி, 4, 5, 6 ஆகிய வார்டுகளுக்கு, பாலாஜி நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நாளை (ஆக.6) 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முகாம் நடக்கிறது. அதேபோல், கிருஷ்ணகிரி நகராட்சி, 8, 9 வார்டுகளுக்கு, கிருஷ்ணகிரி பாத்திமா கம்யூனிட்டி ஹாலிலும், மத்துார் ஒன்றியம், சிவம்பட்டி, பொம்மேபள்ளி பஞ்.,க்களுக்கு, சிவம்பட்டி பாரதி மகாலிலும், ஊத்தங்களை ஒன்றியம், காட்டேரி, புதுார் புங்கனை பஞ்.,க்களுக்கு, காட்டேரி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியிலும் முகாம் நடக்க உள்ளன.
கெலமங்கலம் ஒன்றியம், தொட்டமெட்டரை, பில்லாரி அக்ரஹாரம் பஞ்.,க்களுக்கு, பில்லாரி அக்ரஹாரம் வி.பி.ஆர்.சி., கட்டடத்திலும், தளி ஒன்றியம், பேலகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கொமரனப்பள்ளி பஞ்.,க்களுக்கு, பேகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்க உள்ளன. சம்மந்தப்பட்ட பகுதி மக்கள், முகாம்களில் மனுக்களை வழங்கி தீர்வு காணலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.