ADDED : செப் 12, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் சுற்று வட்டார கிராமங்களில், 8 மாத வயதுடைய மரவள்ளி
கிழங்கு செடியில், செம்பேன் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
இதன் தாக்கத்தால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலைகள் பழுத்து உதிர்வதால், மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், குடுமியாம்பட்டியில், மாவு பூச்சி மற்றும் செம்பேன் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மரவள்ளிகிழங்கு வயலில், அரூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி ஆய்வு மேற்கொண்டார், ஆய்வின்போது, தோட்டக்கலை அலுவலர் ஆர்த்தி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.