/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
30 ஆண்டு பணி ஆசிரியருக்கு பாராட்டு
/
30 ஆண்டு பணி ஆசிரியருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 30, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி,  கெங்கவல்லி அருகே தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் முத்துவேலு, 57. இவர், இந்த மாதத்துடன், 30 ஆண்டு ஆசிரிய பணியை முடித்ததால், அவருக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் குருநாதன் தலைமை வகித்தார்.
அதில் மாணவர்களை தமிழில் அதிக மதிப்பெண் எடுக்க வைத்ததாக தெரிவித்து முத்துவேலுவை பாராட்டினர்.தொடர்ந்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயபால், ரவிசங்கர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

