/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜல்லி ஏற்றி சென்ற லாரியை நிறுத்தியதால் வாக்குவாதம்
/
ஜல்லி ஏற்றி சென்ற லாரியை நிறுத்தியதால் வாக்குவாதம்
ஜல்லி ஏற்றி சென்ற லாரியை நிறுத்தியதால் வாக்குவாதம்
ஜல்லி ஏற்றி சென்ற லாரியை நிறுத்தியதால் வாக்குவாதம்
ADDED : செப் 13, 2024 06:57 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த புலியூர் பகுதியில், தர்மபுரி மாவட்டத்திலிருந்து, 3 டிம்பர் லாரிகளில் எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்த ஆர்.ஐ., சசிகுமார் வாகனத்தை நிறுத்தி அனுமதி பெறப்பட்ட ஆவணத்தை கேட்டார். எம்.சாண்ட், ஜல்லிக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், ஆர்.ஐ., பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி டிம்பர் லாரிகளை எடுக்க விடாமல் தடுத்தார்.
அங்கு வந்த, அ.தி.மு.க.,வை சேர்ந்த முல்லைவேந்தன் தன்னிடம் உரிய ஆவணம் இருப்பதாக கூறி, ஆர்.ஐ.,யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், ஒரு மணி நேரத்திற்கு பின் கோர்ட் மூலம் பெறப்பட்ட உரிய ஆவணத்தை காண்பித்தார். முறையான ஆவணம் இருந்ததால், வண்டியை எடுத்துச் செல்ல ஆர்.ஐ., அனுமதித்தார். இச்சம்பவத்தால் அங்கு மக்கள் கூடினர். பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் சமரச பேச்சால், அங்கு கூடிய மக்கள் கலைந்து சென்றனர்.

