/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் குறிஞ்சி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
/
அரூர் குறிஞ்சி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
அரூர் குறிஞ்சி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
அரூர் குறிஞ்சி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 23, 2025 01:38 AM
அரூர், -தர்மபுரி மாவட்டம், அரூர் - சேலம் சாலைசின்னகுப்ப-த்திலுள்ள, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி கனிஷ்கா, 500-க்கு, 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில், 2ம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். மாணவியர் மித்ரா, வர்ஷினி, 495 மதிப்பெண் பெற்று பள்ளியில், 2-ம் இடமும், மாணவர் கவின், 492 மதிப்பெண் பெற்று பள்ளியில், 3ம் இடமும் பெற்றார். அறிவியல்-13, சமூக அறிவியல்-7, கணிதத்தில், 2 பேர், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழில், 4 பேர், ஆங்கிலத்தில், 3 பேர், 99 மதிப்பெண் பெற்றனர்.
இதேபோல், பிளஸ் 2 தேர்வில், மாணவி கல்யாணி பிரியா, 587 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். 550 மதிப்பெண்களுக்கு மேல், 33 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 73 பேரும் பெற்றுள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவி நிரோஷினி, 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறக்கட்டளையின் தலைவர் தமிழ்மணி, தாளாளர் அசோகன், செயலாளர் கந்தபாரதி, பொருளாளர் சிதம்பரம் ஆகியோர், சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த, பள்ளி முதல்வர் ரவி, ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.