/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காதல் விவகாரத்தில் தகராறு: பெண்ணின் தாயை தாக்கியவர் கைது
/
காதல் விவகாரத்தில் தகராறு: பெண்ணின் தாயை தாக்கியவர் கைது
காதல் விவகாரத்தில் தகராறு: பெண்ணின் தாயை தாக்கியவர் கைது
காதல் விவகாரத்தில் தகராறு: பெண்ணின் தாயை தாக்கியவர் கைது
ADDED : டிச 29, 2024 12:51 AM
கிருஷ்ணகிரி, டிச. 29-
கிருஷ்ணகிரி அடுத்த ஆரி பூசாரி கொட்டாயை சேர்ந்தவர் லதா, 38. இவரது மகளை திருமணம் செய்யும் நோக்கில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சத்யபிரகாஷ்,24, அக்., 7ல், கடத்தினார். இது குறித்து லதா அளித்த புகார் படி கே.ஆர்.பி., டேம் போலீசார் சத்யபிரகாைஷ கைது செய்தனர். கடந்த, 5ல், பெயிலில் வெளிவந்த சத்யபிரகாஷ், மீண்டும் லதாவின் மகளை பின்
தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து லதா, ஊர் பெரியவர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சத்யபிரகாஷை கண்டித்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த சத்ய பிரகாஷ், தன் கூட்டாளி திம்மராயனுடன் கடந்த, 26ல், லதா வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். நேற்று முன்தினம் கே.ஆர்.பி., டேம் போலீசில் லதா அளித்த புகார் படி சத்யபிரகாஷை போலீசார் கைது செய்தனர்.