/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கலை கல்லுாரியில் கலை திருவிழா துவக்கம்
/
அரசு கலை கல்லுாரியில் கலை திருவிழா துவக்கம்
ADDED : செப் 23, 2025 01:46 AM
தர்மபுரி, :தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், தமிழக அரசு உயர் கல்வித்துறையின் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான கல்லுாரி கலைத்திருவிழாவை, மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில், கவிதை, பேச்சு, தற்காப்பு கலை போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மேலும், சிறுகதை போட்டி, வர்ணனை போட்டி, நெருப்பில்லாமல் சமைப்போம், குறும்பட போட்டி, போட்காஸ்ட் போட்டி, கல்வியா செல்வமா என்ற தலைப்பில் விவாத மேடை, இயற்கை விழிப்புணர்வு ஓவிய போட்டி, டிஜிட்டல் போஸ்டர் வடிவமைப்பு, அலங்கார வடிவமைப்பு, கவனிக்க மறந்த காட்சிகள், குழு நடனம், குழு நாடகம், பொம்மலாட்டம் என பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளது.
இதில், தர்மபுரி கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, கல்லுாரி முதல்வர் கண்ணன், இணை பேராசிரியர்கள், மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.