தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மண் திருட்டை தடுக்க முயன்ற ஆர்.ஐ.,யை தாக்க முயற்சி

மண் திருட்டை தடுக்க முயன்ற ஆர்.ஐ.,யை தாக்க முயற்சி

மண் திருட்டை தடுக்க முயன்ற ஆர்.ஐ.,யை தாக்க முயற்சி


ADDED : செப் 11, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அடுத்துள்ள மூக்கனுார் அருகே, கோவில் ரோடு பகு-தியில் கடந்த, 8ம் தேதி இரவு, 9:57 மணிக்கு மண் திருட்டு நடப்-பது குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் சென்-றது. அதன்படி மூக்கனுார் வி.ஏ.ஓ., முருகவேலு, 48, சம்பவ இடம் சென்றார். அங்கு, 2 பொக்லைன் மூலம், 2 டிப்பர் லாரி-களில் மண் ஏற்றி கொண்டிருந்தனர். வி.ஏ.ஓ.,வை கண்டதும் டிரைவர்கள் தப்பினர்.

விசாரணையில், வண்டிகளின் உரிமையாளர் வெள்ளோலை கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் என தெரிந்தது. வி.ஏ.ஓ., தகவல் படி, ஆர்.ஐ., மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இரு-வரும் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது, மண் திருட்டில் ஈடுபட்டிருந்த வெற்றிச்செல்வன், இரும்பு கம்பியால் ஆர்.ஐ., உள்ளிட்டோரை தாக்க முயன்றுள்ளார். இது குறித்து வி.ஏ.ஓ., முருகவேலு புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அரசு ஊழி-யர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்க முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us