/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆட்டோ பணியாளர்கள் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்
/
ஆட்டோ பணியாளர்கள் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 16, 2024 01:27 AM
தர்மபுரி:பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யூ.சி., ஆட்டோ பணியாளர் நலச்சங்கம்
சார்பில், தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்ட
ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம்
அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல்
தலைமை வகித்தார். இதில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற
வேண்டும். பத்து ஆண்டுகள் சிறை, ஏழு லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத்தை
ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ பணியாளர்களுக்கு, நல வாரியத்தின்
மூலமாக இ.எஸ்.ஐ. பி.எப்., மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஆன்லைன்
அபராதத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். 60 வயது முடிந்த ஆட்டோ வாகன
ஓட்டுனர்களுக்கு, 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தனியார்
ஆட்டோக்களை (ஓலா, உபர், ராபிடோ) தடை செய்ய வேண்டும். பண்டிகை
காலங்களில் ஆந்திரா, புதுச்சேரி அரசுகள் வழங்குவது போல், 5,000
ரூபாய் போனஸ் வழங்க வேண்டும்.
உயர்த்தப்பட்ட சாலை வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
நிர்வாகிகள்
பழனி, வீரப்பன், அழகுதுரை, இ.கம்யூ., கட்சி மாவட்ட துணை செயலாளர்
மாதேஸ்வரன், வி.தொ.ச., மாநில செயலாளர் பிரதாபன் உள்பட பலர்
பங்கேற்றனர்.

