/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரிமங்கலம் ஒன்றியத்தில் மயோனைஸ் குறித்து விழிப்புணர்வு
/
காரிமங்கலம் ஒன்றியத்தில் மயோனைஸ் குறித்து விழிப்புணர்வு
காரிமங்கலம் ஒன்றியத்தில் மயோனைஸ் குறித்து விழிப்புணர்வு
காரிமங்கலம் ஒன்றியத்தில் மயோனைஸ் குறித்து விழிப்புணர்வு
ADDED : மே 12, 2025 02:40 AM
தர்மபுரி,: தர்மபுரி மாவட்டம் முழுவதும் நகராட்சி, ஒன்றியம் வாரியாக பச்சை முட்டையிலிருந்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு நடந்து வருகிறது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மேற்பார்வையில், காரிமங்கலம் மற்றும் பாலக்-கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்-ளிட்ட குழுவினர், காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாட்-லாம்பட்டி, பெரியாம்பட்டி, கரகோடள்ளி, காரிமங்கலத்தில் மொரப்பூர் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் புளியம்பட்டி உள்-ளிட்ட பகுதிகளில் உள்ள மயோனஸ் விற்பனை செய்யும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள், பயன்படுத்தும் அசைவ உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் ஆய்வு செய்தனர்.பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசில், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதோடு, இரைப்பை, குடல் தொற்று மற்றும் உணவு நஞ்சாகுதல் (புட் பாய்சன்) போன்ற நோய்கள் ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே, தமிழக அரசு பதப்படுத்தப்படாத பச்சை முட்டையிலி-ருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. உணவு பாதுகாப்பு உரிமம் எண் மற்றும் விப-ரங்கள் அச்சிடப்பட்ட மயோனைஸ் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.