/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துாரில் புகையிலை தீமை குறித்து விழிப்புணர்வு
/
கடத்துாரில் புகையிலை தீமை குறித்து விழிப்புணர்வு
ADDED : அக் 25, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து, கடத்துார் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வட்டார மருத்துவ அலுவலர் அரசு ஆலோசனைப்படி, டாக்டர் கனல்வேந்தன் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில், புகை பிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவு, உடல்நலம், பொருளாதாரம் பாதிப்பு உள்ளிட்ட தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மருத்துவ பயனாளர்கள், பொதுமக்கள், கர்ப்பிணிகள் எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

