/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசார பயணம்
/
தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசார பயணம்
தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசார பயணம்
தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசார பயணம்
ADDED : பிப் 03, 2024 04:04 AM
தர்மபுரி: தேர்தலில், ஓட்டு போடுவது குறித்து, அனைத்து ஓட்டுச்சாவடி பகுதிகளிலும் பிரசார வாகன விழிப்புணர்வு நடந்தது.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும், 100 சதவீதம் ஓட்டளிப்பது குறித்து பிரசார வாகனத்தை, சில நாட்களுக்கு முன் கலெக்டர் துவக்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடி பகுதிகளிலும் நிறுத்தப்பட்டு, வி.வி.பேட்., இயந்திரத்தில் எவ்வாறு ஓட்டு போடுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் நேற்று விழிப்புணர்வு பிரசார வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதிலிருந்த ஓட்டு மாதிரி இயந்திரத்தை காண்பித்து, எவ்வாறு ஓட்டளிக்கலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வாகனம் செட்டிக்கரை, வெள்ளோலை, நடுப்பட்டி, மூக்கனுார் உள்ளிட்ட ஓட்டுச்சாவடி பகுதிகளில் நிறுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

