/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 13, 2024 07:44 AM
தர்மபுரி: தர்மபுரி, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேர்மை பண்பு,- நாட்டின் செழிப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, யூனிடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவன ஓசூர் பிரிவு மேலாளர் சுகவனேஷ் மற்றும் தர்மபுரி கிளை மேலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இப்பள்ளி மாணவர்களுக்கு, நேர்மை, பண்பு, நாட்டின் செழிப்பு, ஊழலை எதிர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். பின், மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வினாடி, வினா, ஓவியம், பேச்சு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

