/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புள்ளியியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
/
புள்ளியியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
UPDATED : ஏப் 16, 2025 01:00 PM
ADDED : ஏப் 16, 2025 01:16 AM
தர்மபுரி:மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தில் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தில், 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், விழிப்புணர்வு பேரணி தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நேற்று நடந்தது. இதில், தர்மபுரி தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் முதன்மை புள்ளியியல் அலுவலர் மதிவாணன் பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில், புள்ளியல் துறை அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, தர்மபுரி நகராட்சி பூங்கா அருகே முடிவடைந்தது. இதில், மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

