/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : டிச 01, 2024 01:41 AM
இளம்வயது திருமணம் தடுப்பு
விழிப்புணர்வு கருத்தரங்கம்
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 1---
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சித்தேரி அரசு பழங்குடியினர் நல உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவியருக்கு, இளம்வயது திருமணம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் தலைமையில் வகித்தார். டாக்டர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லோகநாதன் வரவேற்றார்.
இதில், இளம்வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் உடல் பாதிப்புகள் மற்றும் ரத்த பாதிப்புகள் குறித்து மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது. குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து, தமிழக அரசு வழங்கிய, 1098 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம், பெண் குழந்தைகளுக்கு திருமண வயது முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட வேண்டியது அவசியம். கட்டாய திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள், மாணவியருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சுகாதார மேற்பார்வையாளர் சாதிக் பாஷா, வட்டார குடும்ப நல மேற்பார்வையாளர் கலைச்செல்வி, பகுதி சுகாதார செவிலியர் சாலம்மாள், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கிராம சுகாதார செவிலியர் கல்பனா, அன்னக்கொடி கலந்து கொண்டனர்.