/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
/
'போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
'போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
'போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
ADDED : ஜூலை 13, 2024 08:19 AM
தர்மபுரி: பொதுமக்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் அறிவுறுத்தினார்.இது குறித்து, அவர் நிர்வாகிகளிடம் பேசியதாவது: தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகளாக, போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் விழுப்பு-ரத்தில் மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதிகளில் கள்ளச்சாராய உயிரிழப்பு மற்றும் கொள்ளை, கொலைகள் நடந்து வரும் நிலையில், இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என, தி.மு.க., அரசு விளம்பரம் செய்து வருகிறது.
கள்ளச்சாராய உயிரிழப்பில் நீதி வேண்டும் என, அ.தி.மு.க., தொடர்ந்து போராடி வருகிறது. தி.மு.க.,வின் திறனற்ற ஆட்சியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார். தர்மபுரி அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ., அன்பழகன், துண்டு பிரசுரங்-களை வழங்கி அறிவுறுத்தினார்.