/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
/
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு
ADDED : ஆக 12, 2024 06:38 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ஸ்டீபன் ஜேசுபாதம் இடமாற்றத்தை தொடர்ந்த, புதிய எஸ்.பி.,யாக மகேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றார்.
இவர் இதற்கு முன், சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், எஸ்.பி.,யாக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தின், 54வது எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், சட்ட ஒழுங்கை சீர்படுத்தி, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, சட்டப்படி விரைவான விசாரணை செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். போதைபொருட்களுக்கு எதிராக, துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு, போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள், மாணவ, -மாணவியர் மத்தியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், போக்குவரத்து விதிகளை முறையாக, அமல்படுத்தி விபத்துக்களை குறைக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போலீசார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

