/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
/
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
ADDED : பிப் 10, 2025 01:37 AM
பாலக்கோடு: பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செம்மலை தலைமையில் நடந்தது.
வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். இதில், மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க பயிற்சியாளர் ஜீவானந்தம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பயிற்யாளர் சம்பத்குமார் ஆகியோர் நுகர்வோரின் உரிமைகள், கடமைகள், நுகர்வோரின் உரிமை மீறல்கள், நேரடி விற்பனை குறித்து விளக்கினர். நுகர்வோர் நீதிமன்றங்களின் தீர்ப்பு, தரம் குறைவான மின்சாதன பொருட்கள், ஆன்லைன் சேவை குறைபாடு, முறையற்ற வழியில் மின்னணு வணிகம், நுகர்வோருக்கான நிவாரண வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 இன் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உணவு பொருட்களின் தரம், காலாவதி தேதி, சைவ, அசைவ குறியீடு, தன் சுத்தம், சுற்றுப்புற துாய்மை குறித்து விளக்கினார். இதில், மாவட்ட வழங்கல் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரமேஷ், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஒருங்கினைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சிவநேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.