ADDED : டிச 01, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, டிச. 1-
ஐயப்ப சுவாமியை அவதுாறாக பாடல் பாடிய கானா பாடகி இசைவாணியை கண்டித்து, தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், ஐயப்ப பக்தர்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குருசாமி முனுசாமி தலைமை வகித்தார். இதில் கானா பாடகியை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஐயப்ப பக்தர்கள், கோவிந்தன், குமார், சிவலிங்கம், அர்ஜூனன், சேட்டு உள்பட பலர் பங்கேற்றனர்.