/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலத்து முனியப்பன் சுவாமி கண் திறப்பு
/
பாலத்து முனியப்பன் சுவாமி கண் திறப்பு
ADDED : ஜன 18, 2024 10:34 AM
தர்மபுரி: தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவிலில் சுவாமிக்கு கண் திறப்பு விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது.
தர்மபுரி மாவட்டம்,
நல்லம்பள்ளி அடத்த தொப்பூரில் பாலத்து முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை திருநாளில் பொங்கலிட்டு, சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா, கடந்த, 15-ம் தேதியன்று தொடங்கி, ஒவ்வொரு நாளும் மூலவருக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, அதிகாலை, 3:00 மணிக்கு சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு, ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர்.
இதில், தர்மபுரி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அற
நிலைத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.