/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 22, 2024 12:06 PM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடத்துார் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அல்லி முத்து தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் அரசாங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி பேசினார். இதில் வரும் ஜூலை, 25ல் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், பா.ம.க., வன்னியர் சங்கம் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது.
பொது இடங்கள், தனியார் இடங்களில், மரக்கன்று நட்டு, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா பென்சில் வழங்குவது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர் நத்தம் முதல் கதிரிபுரம் வரை குண்டும் குழியுமாக உள்ள, 3 கி.மீ., சாலையை புதுப்பிக்க வேண்டும்.
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தலைவர் அன்புமணி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில், நிர்வாகிகள் ராமலிங்கம், திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.