/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சூறாவளிக்கு சாய்ந்த வாழை மரங்கள்
/
சூறாவளிக்கு சாய்ந்த வாழை மரங்கள்
ADDED : மே 08, 2024 05:03 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.
சூறைக்காற்றில் செட்டிப்பட்டி, பறையப்பட்டி, அள்ளாளப்பட்டி, ஜம்மணஹள்ளி, கொடமாண்டப்பட்டி, கோபாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டிருந்த, 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமாகின.
அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வாழை மரங்கள் நாசமானதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புழுதியூரை சேர்ந்த பழனியம்மாள் என்பவரது ஆஸ்பெஸ்டாஸ் வீடு சேதமடைந்தது.
அதேபோல், நாகப்பட்டி மீனாட்சி என்பவரது ஆஸ்பெஸ்டாஸ் வீடு, கணபதிப்பட்டி மாரியம்மாள், சென்றாயம்பட்டி வேடியம்மாள் ஆகியோரது ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. வேங்கியாம்பட்டியில் விவசாய நிலத்தில் இருந்த, 3 மின்கம்பங்கள் சாய்ந்தன.

