/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நடமாடும் உணவு வணிகர்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு பயிற்சி
/
நடமாடும் உணவு வணிகர்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு பயிற்சி
நடமாடும் உணவு வணிகர்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு பயிற்சி
நடமாடும் உணவு வணிகர்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு பயிற்சி
ADDED : அக் 01, 2024 01:46 AM
நடமாடும் உணவு வணிகர்களுக்கு
அடிப்படை விழிப்புணர்வு பயிற்சி
தர்மபுரி, அக். 1-
தர்மபுரியில், நடமாடும் மற்றும் சாலையோர சிற்றுண்டி, பானிபூரி, துரித உணவு உட்பட உணவு வணிகர்களுக்கான, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு, மாவட்ட, உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடந்தது. இதில், தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் வரவேற்றார். ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி, அருண், திருப்பதி மற்றும் சரண் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார். இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால், அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் 'நோ புட் வேஸ்ட்' பயிற்றுனர் கோகிலம், உணவு வணிகர்களுக்கு பயிற்றுவித்தார்.
இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட நடமாடும் உணவு வணிகர்கள், இரு பிரிவுகளாக பங்கேற்றனர்.