அடிப்படை வசதிகள் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
அடிப்படை வசதிகள் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : அக் 08, 2026 03:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் அறி-வழகன், மார்க்ரெட் தலைமையில், தமிழ்நாடு வெற்றி திட்-டத்தின் கீழ் ஊராட்சி அடிப்படை வசதிகள் குறித்த கணக்கெ-டுப்பு குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் துணை பி.டி.ஓ.,க்கள் சரத்குமார் சூர்ய குமார், குமார், சரளா அங்-கன்வாடி பணியாளர்கள் சத்துணவு பணியாளர்கள், ஊராட்சி செய-லாளர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அதிகாரி கள் கூறியதாவது: அந்தந்த கிராம மக்கள் பங்களிப்புடன் அனைத்து கிராமங்களிலும் நடக்க உள்ள இப்ப-ணியில் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர், மகளிர் சுய உதவி குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஈடுபட உள்-ளனர். 8ம் தேதி முதல், 16ம் தேதி வரை கிராமங்களில் மதிப்பீடு கள் பணி நடக்கும். குழுவினருடன் பொதுமக்களும் கலந்து கொண்டு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேவை-யான விபரங்களை கண்டறிந்து குறிப்பிட வேண்டும். இதில் புதிய சாலைகள், சீர்படுத்த வேண்டிய சாலைகள், சிமென்ட் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் குறித்தும், குடிநீர் வசதிக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு, சிறு மின் விசை பம்ப் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த தகவல்
களையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
