கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பணி சார்ந்த கோரிக்கை மனுக்கள் அளிக்க அறிவுறுத்தல்
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பணி சார்ந்த கோரிக்கை மனுக்கள் அளிக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 08, 2026 03:18 AM
தர்மபுரி: தர்மபுரி மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களிடமிருந்து பெறப்படும் மனு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, வழிகாட்டு நெறிமு-றைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி வட்டார அளவில் கள அலுவலரிடம், 9ம் தேதி (நாளை) கோரிக்கை மனு அளிக்கலாம். அவை தகுதியின் அடிப்-படையில் தீர்வு காணப்படும். கூட்டுறவு சார்பதிவாளர், கள அலு-வலர் அளவில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்களும், துணைப்பதிவாளரால் நேரடியாக பெறப்படும் கோரிக்கை மனுக்-களும், தர்மபுரி சரக துணைப்பதிவாளரால் வரும், 16ம் தேதி தகு-தியின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.கூட்டுறவு சார்பதிவாளர்கள், கள அலுவலர்கள் மற்றும் துணைப்-பதிவாளர் அளவில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்-களும், மண்டல இணைப்பதிவாளரால் நேரடியாக பெறப்படும் கோரிக்கை மனுக்களும் வரும், 23ம் தேதி தகுதியின் அடிப்ப-டையில் தீர்வு காணப்படும். எனவே. கூட்டுறவுத்துறை அலுவ-லர்கள். கூட்டுறவு சங்க பணியாளர்கள் தங்கள் பணி தொடர்பா-கவும், பணி சார்ந்த கோரிக்கை தொடர்பாகவும், கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.
தர்மபுரி வட்டாரத்திற்கு இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்-கத்திலும், நல்லம்பள்ளி வட்டாரத்திற்கு அதியமான் கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும், பென்னாகரம் வட்டாரத்திற்கு பாப்பாரப்பட்டி சிவா தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும், பாலக்கோடு வட்டாரத்திற்கு, பாலக்கோடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும் மனு அளிக்கலாம். காரிமங்கலம் வட்டாரத்திற்கு, காரிமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும், மொரப்பூர் வட்டாரத்திற்கு, மொரப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவல-கத்திலும், அரூர் வட்டாரத்திற்கு, அரூர் தொடக்க வேளாண் கூட்-டுறவு கடன் சங்க அலுவலகத்திலும். பாப்பிரெட்டிப்பட்டி வட்-டாரத்திற்கு, பி.துரிஞ்சிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும் மனு அளிக்கலாம். மனுக்கள் காலை, 9 மணி முதல், மாலை, 4 மணி வரை பெறப்படும். நேரில் வர இயலாதவர்கள் தங்களின் கோரிக்கைகளை பதிவாளர் அலுவலக பிரத்தியேக வாட்ஸாப் எண்: 98840 00845 மூலம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
