தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் தொடர் முழக்க போராட்டம்

ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் தொடர் முழக்க போராட்டம்

ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் தொடர் முழக்க போராட்டம்


UPDATED : அக் 08, 2026 04:32 AM

ADDED : அக் 08, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 04:32 AM ADDED : அக் 08, 2026 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பணியாற்றும் பரிசல் ஓட்டிகள், மீன்பிடி தொழிலாளர்கள், சமையல் மற்றும் மசாஜ் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில் பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகம் முன் நேற்று, தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.

சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ராஜூ தலைமை வகித்தார். செய-லாளர் நாகராஜ் பேசினார். போராட்டத்தில், பரிசல் இயக்க உரிமம் வழங்குவதில் முறை-கேடுகளை தவிர்த்து, வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்ப-டையில் உரிமம் வழங்க வேண்டும். சமையல் தொழிலில் ஈடு-படும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒகேனக்கல்லில், மூன்று வழித்தடங்களில் பரிசல் இயக்க அனு-மதி வழங்க வேண்டும். வேலையில்லா காலங்களில் தொழிலா-ளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்-டன.

இதில், ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் சங்க செயலாளர் சக்கர-வர்த்தி, தொ.மு.ச., சங்க நிர்வாகி முத்தையன், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் வரதன், சமையல் கலைஞர் சங்க தலைவர் கல்யாணி, செயலாளர் வெங்கட்டம்மாள் மற்றும் பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us