/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உணவு வணிகர்களுக்கான அடிப்படை பயிற்சி
/
உணவு வணிகர்களுக்கான அடிப்படை பயிற்சி
ADDED : ஜன 29, 2025 07:11 AM
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சாலையோர சிற்றுண்டி, பானிபூரி, சில்லி சிக்கன் உள்ளிட்ட சிறு நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நேற்று நடந்தது. மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி வரவேற்றார். துணை பி.டி.ஓ., நாசீர்கான், அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகள் முருகன், அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார். இதில், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் தனியார் நிறுவனத்தை சேர்ந்த காமேஷ், தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், கவச உடை, மேலங்கி, தலையுறை, பொருள் மேலாண்மை, இருப்பு வைத்தல், நான்கு விதமான பொருட்கள் கெடுவதற்கான சூழ்நிலைகள் தவிர்த்தல், குடிநீர் தன்மை, உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய விபரங்கள், குளிர்பதன பெட்டிகளில் பால் பொருட்கள் மற்றும் இறைச்சி வைத்திருக்க வேண்டிய குளிர்நிலை குறித்து விளக்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானுசுஜாதா உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு விண்ணப்பங்களை பெற்றார். பயிற்சியில், 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.