ADDED : அக் 08, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த மாங்கரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில், 727 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று, வழக்கம் போல் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்-பட்டது.
மதிய உணவு இடைவெளியின் போது சாப்பிட சென்றனர். அப்-போது, பள்ளி வளாகத்திற்கு வெளியே இருந்த மரத்தில், இருந்த தேனீக்கள் கலைந்து, சாப்பிட்டு கொண்டிருந்த மாணவர்களை கொட்டின. இதில், 54 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்-களை, ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையறிந்த, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். சிகிச்சை முடித்த மாணவர்கள் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.