/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.2.10 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
/
ரூ.2.10 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
ADDED : நவ 03, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை வாரச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபா-ரிகள் வந்திருந்தனர்.
சந்தையில், 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசா-யிகள், வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்-றிலை, 4,000 முதல், 12,000 ரூபாய் வரை விற்றது. நேற்றும், 4,000 முதல், 12,000 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், நேற்று மொத்தம், 20 வெற்றிலை மூட்டைகள், 2.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

