/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
/
சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
ADDED : நவ 03, 2025 03:06 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், சின்ன வெங்காயம் விலை உயர வாய்ப்-புள்ளதால், அதை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்-றனர்.
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திண்டுக்கல் உட்பட, பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு சின்ன வெங்காயம் ஒரு கிலோ, 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று, சின்ன வெங்-காயம் ஒரு கிலோ, 40 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த மாதங்களில் நல்ல விலை கிடைத்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சின்ன வெங்-காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், தர்மபுரி மாவட்டத்தில், கார்த்திகை மாத பட்டத்தில், சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்-றனர். இதற்காக விதை வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது.
இது குறித்து, அதகபாடியை சேர்ந்த, விதை வெங்காயம் மொத்த விற்பனையாளர் சரவணன் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2 ஆண்டுகளாக பருவமழை மித-மாக பெய்து வருவதால், வெங்காயம் சாகுபடி அதிகரித்தது.
இதனால், சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விதை வெங்காயம், திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கிருந்து, சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்த பின், தர்மபுரி மாவட்டம் முழுவதும் மற்றும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்-டத்தை சேர்ந்த விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.
தற்போது, மொத்த விற்பனையில் தரத்திற்கேற்ப சின்ன வெங்-காயம் ஒரு கிலோ, 40 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

