ADDED : நவ 03, 2025 03:07 AM
தர்மபுரி: கிறிஸ்தவர்கள் கல்லறை திருவிழா, நவ., 2ல் அனுசரிக்கப்படுகி-றது. அன்றைய தினம், முன்னோர்களின் கல்லறைக்கு குடும்-பத்தார் சென்று, பூக்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்தி ஏற்-றியும் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இதையொட்டி, தர்மபுரி டவுன் சந்தைபேட்டையில் உள்ள கல்-லறை தோட்டம் மற்றும் செல்லியம்பட்டி கல்லறை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறைகளில், ஏராள-மான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்-களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்-தது.
* பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, பொம்மிடி பி.பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை பாத்திமா நகர், கடத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கல்லறைகளில் ஏராள-மான கிறிஸ்தவர்கள் கூடி, முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் துாவி பிரார்த்தனை நடத்தினர்.
தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்-தது.

