ADDED : டிச 12, 2025 05:38 AM

தர்மபுரி: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பாரதியாரின், 144வது பிறந்-தநாள் விழாவையொட்டி, அவரது உருவ படத்-திற்கு மலர் துாவி
மரியாதை செலுத்தப்பட்டது.
தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சுகந்தி பாஸ்கரன் தலைமை வகித்தார். அரூர் கச்சேரிமேட்டில், தமிழ்நாடு கலை இலக்-கிய பெருமன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு, சின்னக்கண்ணன் தலைமை வகித்தார். அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட பல்-வேறு அரசு பள்ளிகளில், பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பாரதியார் குறித்து கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்-கப்பட்டன.
* பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாண-வர்கள் பாரதியாரின் பாடல்கள், கவிதைகள், புதிய ஆத்திச்சூடி உள்ளிட்டவை குறித்து பேசினர். தலைமை ஆசிரியர் பழனி பேசினார்-.
* ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்து, பாரதி-யாரின் வாழ்க்கை, அவரின் பணிகள் பற்றி பேசினார். ஒன்றிய அளவில் நடந்த கலைத்திரு-விழா மற்றும் வானவில் மன்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, சான்றி-தழ்கள் வழங்கப்பட்டன.

