/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பதவிக்காலம் நிறைவு எதிரொலி கவுன்சிலர்களுக்கு பிரியாணி விருந்து
/
பதவிக்காலம் நிறைவு எதிரொலி கவுன்சிலர்களுக்கு பிரியாணி விருந்து
பதவிக்காலம் நிறைவு எதிரொலி கவுன்சிலர்களுக்கு பிரியாணி விருந்து
பதவிக்காலம் நிறைவு எதிரொலி கவுன்சிலர்களுக்கு பிரியாணி விருந்து
ADDED : ஜன 04, 2025 01:39 AM
அரூர், ஜன. 4-
தமிழகத்தில் முதலில் தேர்தல் நடந்த, தர்மபுரி உள்பட, 27 மாவட்டங்களில், ஊராட்சி பிரதி
நிதிகளின் பதவிக்காலம் வரும், 5ல் நிறைவடைகிறது. மீதமுள்ள, 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம், 2026ல் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று பதவிக் காலம் முடிவடைவதை முன்னிட்டு, கவுன்சிலர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இது குறித்து கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது: அரூர் யூனியனில் மொத்தம், 23 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களின் பதவிக் காலம் நாளை, (ஜன., 5) நிறைவடைகிறது. இதையொட்டி, நேற்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர் பசுபதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிக்கன் பிரியாணி விருந்து அளித்தார். இதில், 2 கவுன்சிலர்களை தவிர அனைவரும் கலந்து கொண்டனர். அதே போல், அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமாரும் பங்கேற்றார். இவ்வாறு அவர் கூறினார்.